
REJCTX
Available in Kannada
A group of youngsters comes together to form a rap band to showcase their talent and express their angst about millennial teen issues including sexual orientation, body shaming, and gender fluidity.
Director & Cast
Web Series Details
எபிசோட் 1 - நவ் யூ சீ ஹிம், நவ் யூ டோன்ட்
RejctX தங்கள் இசைப்போட்டிக்கான தங்கள் பெர்பாமென்ஸுக்கு தயாராகும் வேளையில், தங்கள் குழுவின் முன்னணிப் பாடகரான ஆரவ் வரவில்லை என்பதை அறிகிறார்கள். இருப்பினும் ஆரவ் இல்லாமல் போட்டியில் பங்கேற்க முடிவு செய்கிறார்கள். ஆனால் திடீரென ஒரு உடல் மேடையின் நடுவே தொங்கி, அவ்விடத்தில் பெரும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனிடையில், பிளாஷ்பேக் இந்த இளைஞர்களின் கடினமான வாழ்க்கையை நமக்கு விவரிக்கிறது.
எபிசோட் 1 - நவ் யூ சீ ஹிம், நவ் யூ டோன்ட்
எபிசோட் 2 - தி லேடி இன் ரெட்
ஆரவ் காணாமல் போனதால் கலக்கம் அடைந்த க்யாரா, ஹுசைனை சந்திக்கிறார், ஆரவ் தனது தாயை சந்திக்க இந்தியா சென்றுள்ளார் என்று அவர் சொன்னதைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார். பர்னோமித்ரா ஏன் அவரைப் பழிவாங்க முயல்கிறார் என்பதை ஒரு ஃப்ளாஷ்பேக் நமக்கு வெளிப்படுத்துகிறது. இதற்கிடையில், ஆரவ் காணாமல் போனதற்கு ஸ்டீவ் ஏதாவது செய்யக்கூடும் என்று க்யாரா நினைக்கிறார்.
எபிசோட் 2 - தி லேடி இன் ரெட்
எபிசோட் 3 - ஹூ இஸ் தட் கேர்ள்?
ஸ்டீவ் மற்றும் பர்னோமித்ரா இருவரையும் ஒன்றாக பார்த்த பின் க்யாரா மற்றும் சேஹ்மத் இருவரும் அவளைக் கண்காணிக்கவும் அவளின் மொபைல் மெசேஜ்களை ஆக்ஸஸ் செய்யவும் முடிவெடுக்கின்றனர். கடந்தகாலத்தில் சியர் லீடருக்கான ட்ரையலுக்கு வந்த பெண்களை பர்னோமித்ரா அவமதிக்கிறார், இது க்யாராவை கோபப்படுத்துகிறது. இதனிடையில் ஆரவ் மற்றும் மேடி கூடைப்பந்து அணியில் இடம்பெற போராடுகிறார்கள். பின்னர் ஆரவ் தனது கோச் உடன் அனுஷ்கா நெருக்கமாக இருப்பதைக் கண்டு கோபமடைந்து அந்த கோபத்தை ஒரு ராப் பாடலாக எழுதி அதைப் பதிவு செய்கிறான்.
எபிசோட் 3 - ஹூ இஸ் தட் கேர்ள்?
எபிசோட் 4 - மைண்ட் யுவர் கேம்
கூடைப்பந்துப் போட்டியின் போது மேடிக்கு அவன் தாயின் ஆபாச வீடியோ கிளிப் ஒன்று வருகிறது. அதைக்கண்ட மேடி மனதளவில் பாதிக்கப்படுகிறான். அந்த வீடியோவால் மேடிக்கும் ஆரவுக்கும் நடுவே சண்டை வெடிக்கிறது. ஆனால் அந்த பிரச்னைகளை தாண்டி போட்டியில் தங்கள் அணி வெற்றிபெற மேடி உதவுகிறான். பின்னர், ஹாரி மற்றும் அனுஷ்கா இருவரும் ஆரவ்வை ஒரு ராப் போட்டியில் பங்கு பெற வைக்க முயல்கின்றனர். ஆனால் தங்கள் முயற்சியில் அவர்கள் தோல்வியைத் தழுவுகின்றனர்.
எபிசோட் 4 - மைண்ட் யுவர் கேம்
எபிசோட் 5 - அன்பினிஷ்டு பிசினஸ்
சேஹ்மத் உடன் நெருக்கமாக இருந்த பின் அடுத்த நாள் காலை மிஷாவுக்கு ஒன்றும் நினைவில் இல்லை. சேஹ்மத் இடம் தன் பாலியல் எண்ணம் மற்றும் விருப்பங்கள் உட்பட பலவற்றைப் பற்றி மனம் திறக்கிறான் க்யாரா. கடந்தகாலத்தில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு சேஹ்மத் எழுதிய அற்புதமான பாடலை ஆரவ் அடையாளம் கண்டு அதை அவன் பாடி அது மாபெரும் வெற்றியடைந்த கதையை நமக்கு விவரிக்கிறது. இந்த பாடலின் வெற்றி அவனுக்கு REJCTX என்ற ஒரு இசைக்குழுவை ஆரம்பிக்க உந்துசக்தியாக இருக்கிறது.
எபிசோட் 5 - அன்பினிஷ்டு பிசினஸ்
எபிசோட் 6 - தேங்க் யூ மேம்!
தன் நிலைக்கு ஹாரி தான் காரணம் என அறிந்து ஆரவ் அதிர்ச்சியடைகிறான். கடந்தகாலத்தில் ஹுசைன் REJCTX பற்றி தகவல்களை வெளியிட நிறைய முயற்சி செய்கிறார். ஹாரி ஒரு போட்டியைப் பற்றி சொல்ல அந்த போட்டியில் பங்கு பெற REJCTX முடிவு செய்கிறது. ஆனால் போட்டியில் இசைக்குழுவின் உறுப்பினர்கள் பற்றிய அடையாளங்களை கிட்டத்தட்ட ஹுசைன் வெளிப்படுத்தும் வேளையில் சிக்கல் உருவாகிறது.பின்னர், க்யாரா மற்றும் ஆரவ் இருவரும் மனம் விட்டு பேசி தங்கள் மனவேற்றுமைகளை போக்குகின்றனர்.
எபிசோட் 6 - தேங்க் யூ மேம்!
எபிசோட் 7 - கோயிங் டவுன்
ஹுசைனுடனான கலந்துரையாடலைப் பற்றி அறிய க்யாரா அனுஷ்காவின் வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு ஹாரியைப் பார்த்து அவன் மீது சந்தேகம் கொள்கிறாள். இதற்கிடையில், ஆரவ் தன்னை காப்பாற்ற உதவி கோர முயற்சிக்கிறான், ஆனால் அவனது முயற்சிகள் பலனளிக்கவில்லை. அனுஷ்கா ஆரவ்வை எப்படி தன் பக்கம் கவர்ந்திழுத்து, படிப்பு, நண்பர்கள் மற்றும் இசையிலிருந்து அவனை திசைதிருப்பினார் என்பதைக் காட்ட கதை பின்னோக்கி நகர்கிறது. பின்னர், க்யாராவின் பழைய புகைப்படம் ஒன்று கசிந்து கல்லூரியில் அனைவரும் அவள் உடலமைப்பை கேலி செய்கின்றனர். இதற்கு ஆரவ் தான் காரணம் என க்யாரா அவனைச் சாடுகிறாள்.
எபிசோட் 7 - கோயிங் டவுன்

எபிசோட் 8 - காட்ச்சா
ஆரவ் கடத்தப்பட்டதை அறிந்ததும் க்யாரா உடனே தங்கள் குழுகின் மூத்த மற்றும் நம்பிக்கையான நபரான அனுஷ்காவுக்கு இதுபற்றி தெரிவிக்க முடிவு செய்கிறாள்.அனுஷ்காவுக்கும் தன் தந்தைக்கும் இடையே இருந்த தொடர்பை அறிந்துகொண்ட ஆரவ் அவளை தவிர்க்கத் துவங்கினான்.பின்னர், RejctX ஒரு போட்டியில் வைல்ட் கார்டு நுழைவைப் பெறும்போது, தங்கள் குழுவில் ஆரவ் தேவை என்பதை குழு உறுப்பினர்கள் உணர்கிறார்கள். க்யாரா ஆரவ் உடனான தனது கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறாள் மேலும் மற்றும் அவனை இசைக்குழுவில் சேரச் செய்கிறாள்.
எபிசோட் 8 - காட்ச்சா

எபிசோட் 9 - பேக் டு ஜீரோ
ஹாரி RejctX இடம் மர்ம பெண் ஒருவள் தன்னை மயக்கி எவ்வாறு காரியங்களை சாதித்தாள் என்பதை விவரிக்கிறான். இறுதியாக ஆரவ் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறான். அவனை சந்திக்கும் இசைக்குழுவினர், ஹுசைன் செய்த உதவிக்கு நன்றி கூறுகின்றனர். அனுஷ்காவை கைது செய்ய ஹுசைன் போலீசுக்கு போன் செய்கிறான், ஆனால் அவள் தப்பித்துவிடுகிறாள். மீளப்பெறும் அறிகுறிகள் (Withdrawal Symptoms) உடன் போராடும் ஆரவ் ஒரு துப்பாக்கியைக் கண்டுபிடிக்கிறான்.
எபிசோட் 9 - பேக் டு ஜீரோ

எபிசோட் 10 - பேங் பேங்
RejctX உடன் ஆரவ் மீண்டும் இணைந்தாலும் அவன் மீளப்பெறும் அறிகுறிகளுடன் (Withdrawal Symptoms) போராடுகிறான்.அனுஷ்கா ஆரவ்விடம் அவன் தந்தையுடனான தன் உறவைப் பற்றிய உண்மைகளை விளக்குகின்றாள். பின்னர், RejctX தங்கள் இறுதி பெர்பாமென்ஸுக்கு தயாராகும் போது ஆரவ் காணாமல் போனதையறிந்து அவன் இல்லாமல் போட்டியில் பங்கேற்க முடிவெடுக்கின்றனர். பின்னர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தையைத் தேடி துப்பாக்கியுடன் பள்ளிக்கு கோபமாக செல்கிறான் ஆரவ்.
எபிசோட் 10 - பேங் பேங்
Details About REJCTX Web-series :
| Movie Released Date | 1 Oct 2019 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|

